இலங்கையில் தற்போது எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? யார் அதிகம்..?

0
165 views

இலங்கையில் பெண்களின் சனத்தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆண்களை விடவும் இலங்கையில் 18 லட்சம் பெண்கள் வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டில் ஆண்களை விடவும் 18,17000 பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும்.மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர்.
மது, போதைப் பொருள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருள் பயன்பாடு, இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களினாலும் ஆண்கள் உயிரிழக்கின்றனர் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here