திக்திக் ஆட்டத்தில் இறுதிவரை கில்லரி விளையாட்டுக் கழகமே கிண்ணத்தைப் பெற்றுக் கொள்ளப்போகிறது என்ற நிலையில் இருந்த ஆட்டத்தில் அறுதி 30 செக்கனில் திகில் போட்டு ஆட்டத்தைச் சமனிலைப்படுத்தி சமனிலை தவிர்ப்பு உதையில் 6:5 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வடக்கின் வல்லவன் என்ற நாமத்தை தமதாகக்கிக் கொண்டது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் .
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீககின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டு; கழகம் வடமாகாண ரீதியாக நடத்திய வடக்கின் வல்லவன் கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் இரவு குறித்த மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றன.இவ்விறுதியாட்டத்தில் மன்னார் கில்லரி விளையாட்டு; கழகமும் நாவாந்தறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கரகோசத்தடன் ஆரம்பமான இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு இலக்கணம் வழங்குவதாக இரு அணியினரும்’ அசத்தலாக ஆடினர். முதற்பாதி யாட்டத்தில் இரு அணிவருர்களின் கால்களுக்குள் அகப்பட்டு பந்து அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருந்தது. புந்திற்கே இந்த நிலை என்றால் பார்வையாளரின் நிலையைச் சொல்லத்தேவையே இல்லை.பந்த அங்குமிங்கும் அலைந்ததே தவிர கோல் எவையும் பதியப்படவில்லை.இப்பாதியில் இரு அணியாலும் பல கோல்போடும் சந்தர்ப்ங்கள் கோட்டை விடப்பட ஆட்டம் சமனிலையில் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.
இடைவேளையின் பின்னரும் கிட்டத்தட்ட இதேநிலை நிடித்தபோதும் ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் கில்லரியின் மன்கள வீரர் ரஞசாவின் கால்களுக்குள் அகப்பட்ட பந்து கோல் கம்பங்களுக்கு அண்மையில் சென்று கொண்டிருந்தபோது –கிட்டத்தட்ட கோல் என்று அனைவரும் எண்ணியிருந்த போது நாவாந்துறை வீரர் கோல்ப் பகுதிக்குள் முறைதவறிய ஆட்டத்தை வெள்ளிப்படுத்த எதிரணிக்கு தண்டனை உதைகிடைத்தது.கோல்போடுவதற்க்கு படாதபாடு பட்ட கில்லரி அணியினர் கிடைத்த சந்தர்ப்பத்தை சும்மா விடுவார்களா.கில்லலியின் நாயகன் றஞசா தண்டனை உதையை உதைக்க பந்து மறுபேச்சின்றி கோல்கம்பங்’களுக்குள் சரண்புகுந்தது.ஒருகோல் போடமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த அவ்வணியின் இரசிகர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா ஆனந்தத் தாண்டவமாடினார்கள்.தோடர்ந்து பதில் கோல் போடுவதற்க்கு சென்மேரிஸ் அணியினர் முனைப்புககாட்ட கில்லிரியின் பின்கள கில்லாடிகள் விடுவதாக இல்லை நேரம் செல்லிச் செல்ல அனைவருக்கும் திக்திக் என்ற நிலை .ஆட்டம் நிறைவடையும் நேரம் நெரங்கி கிட்டத்தட்ட ஆட்டன் நிறைவடையப்போகின்றது என்ற நிலை.அணியின் ஆதரவாள்கள் ஒரே கூச்சல் குழப்பம் செய்ய 30 செக்கன்கள் இரக்கும் போது அசத்தல் போல் ஒன்றைப்போட்டு ஆட்டத்தைச் சமனிலைப் படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் சென்மேரிஸ் அணியின் தலைவர் யக்சன்.அப்போது ஆட்டம் நிறைவடைவதாக நடுவர் சமிக்கை செய்ய ஆனந்த மேலீட்டினால் மைதானத்தில் நுழைந்த பார்வையாளர்கள் ஆடிப்பாடி மகிழ்தனர்.
இதனை அடுத்து வல்லவன் யார் என்பதனை தீர்மானிப்பதற்காக சமனிலை தவிர்ப்பு உதைவழங்க வேண்டிய நிரப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு .ஆனால் பார்வையாளர்கள் மைதானத்தை விட்டு வெள்யேறாத நிலை .பின்னர் பலத்த சிரமத்தின் மத்தில் பார்வையாளர்களை வெளியேற்றி தண்டனை உதைவழங்கப்பட 5:4 என்று சென்மேரிஸ் வெற்றி பெற்று வடக்கின் வல்லவன் பட்டத்தை சூடிக்கொண்டதோடு 2 லட்சம் ரூபா பணப்பரிசினையும் தமதாக்கிக் கொண்டனர்.இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஆட்டத்தைச் சமனிலைப்படுத்திவெற்றிக்கு வித்திட்ட சென்மேரிஸ் அணி வீரர் யக்சனும் தொடர் ஆட்ட நாயகனான கில்லரியின் றஞசாவும் தெரிவு செய்யப்பட்டனர்.சிறந்த நன்னடத்தை அணியாக கில்லரி விளையாட்டுக் கழகமும் வளர்ந்து வரும் வீரராக வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழக வீரர் கௌரிதாசனும் சிறந்த கோல்க் காப்பாளராக கில்லரி வீரர் சரத்பாவுவம் மக்கள் மனம் கவர்ந்த வீரராக மன்னார் செ;ஜோசப் அணி வீரர் டிக்கொணியும் தெரிவு செய்யப்பட்டனர்.Nhட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிpல்களையும் பதக்கங்களையும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன் வழங்கிக் கௌரவித்தார்.இதில் இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தலைவர் அனுர டி சில்வா உட்பட பலரும் கலந்த கொண்டனர்.(108)