தினச்செய்தியின் அனுசரனையுடன் நெற்கொழு கழுகுகள் வளையாட்டுக்கழகம். நடாத்தும் மின் ஒளியில் இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றின் இறுதி ஆட்டத்தில் மன்னார் கில்லரி வி.க எதிர்த்து அந்தோணியார்புரம் சென்.அன்ரனீஸ் வி.க மோதியது. வெற்றி பெறும் அணி அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் என இடம்பெற்ற போட்டியாகையால் சுவாரஸ்யமாக அமைந்தது. போட்டி ஆரம்பித்து 09 ஆவது நிமிடத்தில் கில்லரி வீரர் ரஞ்சன் முதலாவது கோலினை அடிக்க பதிலுக்கு 25 ஆவது நிமிடத்தில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனீஸ் முன்கள வீரர் ஆமோஸ்தீபன் ஒரு கோலினை அடித்து மீண்டும் சமன் செய்தார். சமநிலையில் மீண்டும் ஆரம்பித்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளினதும் சுறுசுறுப்பான ஆட்டம் ரசிகர்களை உட்சாகப்படுத்தியது. கில்லரியின் முன்கள வீரர் அன்ரூடிலக்சன் 20 ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பினை கோலாக மாற்ற மீண்டும் கில்லரி முன்னிலை பெற்றது. தொடர்ந்தும் சென்.அன்ரனீஸ் அணியினது முயற்சிகளை கில்லரி பின் கள வீரர்கள் முறியடிக்க மன்னர் கில்லரி வி.க 2:1 என வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக கில்லரி ரஞ்சன் தெரிவு செய்யப்பட்டார்.
அன்று காட்சி போட்டியாக நடைபெற்ற மன்னார் சென். அன்ரனீஸ் (டீ) மற்றும் வல்வை வி.க அடையிலான போட்டியிலே சென். அன்ரனீஸ் (பி) அணியின் வீரர் அன்ரனி ஒரு கோலினை பெற்றதன் மூலம் மன்னார் சென். அன்ரனீஸ் (பி) 1:0 என வெற்றி பெற்றது.