தினச்செய்தி அனுசரனையுடன் நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 12.09.2015 அன்று நடைபெற்ற சுப்பர் 8 போட்டியில் வல்வெட்டித்துறை ஆதிசக்தி வி.க எதிர் பலாலி விண்மீன் வி.க இடையிலான முதலாது போட்டியில் 4 ஆவது நிமிடமே பலாலி விண்மீன் வீரர் யூட்கனடி முதலாவது கோலினை அடித்து சிறப்பான ஆரம்பத்தினை கொடுத்தார். எனினும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என விளையாடிய ஆதிசக்தி வீரர்கள் கௌரிதாசனின் காலால் முதலாவது கோலினை பெற்றுக் கொண்டனர்.
இரண்டாம் பாதி ஆட்டம் 1:1 என சமநிலையில் ஆரம்பிக்க நீண்ட நேரமாக இரண்டு அணிகளும் போராடிய போதும் கோல் பெறும் வாய்ப்புக்கள் நழுவவிடப்பட்டன. எனினும் ஆட்ட முடிவிற்கு 03 நிமிடங்கள் மீதமிருக்க ஆதிசக்தி குகன் ஒரு கோலினை பெற்றதன் மூலம் ஆட்டத்தினை 2:1 என ஆதிசக்தி வெற்றி கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக கௌரிதாசன் தெரிவுசெய்யப்பட்டார். ஆதிசக்தி விளையாடிய 03 சுப்பர் 8 போட்டிகளில் 02 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.