செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தேர்திருவிழாவில்இடம்பெற்ற களவுஎன்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர் வரும் 2 ஆம் திகதி வரை மறியலில் வக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார் .
நேற்று முன்தினம் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது 8பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கலிகள் களவாடப்பட்டிருந்தன.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்புக் சேர்ந்த ஆண் ஒருவரையும் புத்தளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் மூவரையும் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது மூவரையும் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்