வல்வை சைனிங்ஸ் விளையாட்டக் கழகத்தின் அமர்ர் நடராசா வைத்திலிங்கத்தின் கிறிக்கற் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது வல்வை றெயின்ப்ஸ் வி.கழகம்.அமர்ர் வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக வல்வை சைனிங்ஸ் வி.கழகம் நடாத்திய 12ஒவர்கள் கொண்ட கிறிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று நடைபற்றது.
இதில் முதலில் தடுப்பெடுத்தாடிய றெயின்ப்ஸ் போய்ஸ் அணி 12 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.அந்த அணியில் சிறீகரன் 49 ஓட்டங்களையும் கவிதன் மற்றும் ஜெகன் ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் அபிதன் மோகனகாந் தலா விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சைனிங்ஸ் வி.கழகம் 12 ஓவர்கள் நிறைவில் 6வக்கட்டை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.அந்த அணியில் துளசிராம் 37ஓட்டங்களையும்சதீஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பிரணவன் ஜெகன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.போட்டியின் ஆட்ட நாயகனாக றெயின்போய்ஸ் அணியின் சிறிகரனும் தொடர் ஆட்ட நாயகனாக ஜெகனும் தெரிவு செய்யப்பட்டனர்