FIRST FRESH FOOD LIMITED (லண்டன்) இன் அனுசரணையுடனும் தமிழ் mirror மற்றும் உதயன் பத்திரிகையின் ஊடக அனுசரணையுடனும் மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பமாகியதுஆரம்பமாகியது.
முதல் போட்டியில் வல்வை ரேவடி விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோலினை போட போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை றெயின்போ விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டு கழகம் மோதியது. போட்டியின் ஆட்ட நேர முடிவில் றெயின்போ விளையாட்டு கழகம் 4 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்றைய முதல் போட்டியில் B பிரிவிலுள்ள உதயசூரியன் நேதாஜி அணிகள் மோதின . இறுதி வரை இருஅணிகளும் கோல் எதனையும் போடாமல் இருக்க ஆட்டம் சமனிலையில் முடிவுற்றது. இரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்றன. இரண்டாவது போட்டியில் A பிரிவிலுள்ள சைனிங்ஸ், தீருவில் அணிகள் மோதின. இதில் சைனிங்ஸ் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சைனிங்ஸ் அணிக்காக நிரூபன் கோல் அடித்தார். ஆட்டநாயகன் விருதினை சைனிங்ஸ் கோல்காப்பாளர் குமரேசன் அவர்கள் பெற்றார்.