ஆஷஸ் இங்கிலாந்து வசம்….!

0
675 views

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் ‘வேகத்தில்’ அசத்திய இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 8 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து 2–1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் நாட்டிங்காமில் கடந்த 06 ம் திகதி துவங்கியது.

 

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிராட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் ரோஜர்ஸ் ‘டக்–அவுட்’ ஆனார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்மித் (6) நடையை கட்டினார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் (0), வுட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் பிராட் ‘வேகத்தில்’ தடுமாறினர்.இவரது மிரட்டல் பந்துவீச்சில் ஷான் மார்ஷ் (0), வோஜஸ் (1), கேப்டன் கிளார்க் (10) ‘பெவிலியன்’ திரும்பினர்.ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் நேவில் (2), பின் பந்தில் போல்டானார். பின் களமிறங்கிய ஸ்டார்க் (1). ஜான்சன் (13), லியான் (9) ஆகியோரும் ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ வெளியேறினர்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஹேசல்வுட் (4) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிராட் 8, வுட், பின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் லித், கேப்டன் குக் நிதானமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்த போது லித் (14) அவுட்டானார். பெல் (1) ஏமாற்றினார்.பொறுப்பாக ஆடிய கேப்டன் குக் (43) நம்பிக்கை தந்தார்.அபாரமாக ஆடிய ரூட் சதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு துந்த பேர்ஸ்டோவ் (74) அரைசதம் கடந்தார். ரூட் 130 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் வீசிய வழக்கமான இடது கை வேகப்பந்து வீச்சாளரின் கோணத்துக்கு ரூட் மட்டையின் விளிம்பைக் கொடுத்தார், நெவில் தவறு செய்யவில்லை.
இரவுக்காவலன் மார்க் உட் அவருக்கு கொடுத்த பணியை ஓரளவுக்கு திறம்பட செய்தார். 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கின் அதிவேக லெக்ஸ்டம்ப் பந்தை கோட்டை விட்டார். லெக் ஸ்டம்ப் பறந்தது. பட்லர் இறங்கி அவசரகதியில் 3 பவுண்டரிகளை அடித்து கொஞ்சம் அலட்சியமாக ஸ்டார்க் பந்தை அதிதன்னம்பிக்கையுடன் ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்று பவுல்டு ஆனார்.
ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து ஹேசில்வுட்டின் லெக் திசை பந்தில் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். 332ஃ8 என்று ஆனது இங்கிலாந்து, அதன் பிறகு அலி, பிராட் இணைந்து 8 ஓவர்களில் 58 ரன்களை சாத்தினர். அலி 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஜான்சனின் முதல் விக்கெட்டாகச் சாய்ந்தார். ஆனால் ஸ்லிப்பில் ஸ்மித் அற்புதமான ஒரு கை கேட்ச் எடுத்ததும் குறிப்பிடத்தகுந்தது. ஹேசில்வுட்டின் ஓரே ஓவரில் அலி 2 பவுண்டரிகளை விளாச, பிராட் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் வந்தது 2-ம் நாள் உணவு இடைவேளைக்கு சற்று முன் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்சை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் ஆரோக்கியமான 331 ரன்கள் முன்னிலையைப் பெற்றுள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 27 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதல் நாளில் 17 ஓவர்களில் 73ஃ3 என்று கைப்பற்றிய ஸ்டார்க் இரண்டாம் நாளும் மேலும் 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து மேலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. வோஜஸ் (48), ஸ்டார்க் (0) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க் (0), ஹேசல்வுட் (0), நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய வோஜஸ் அரைசதம் அடித்தார். பெரிய அவமானம்: மார்க் வுட் பந்தில் நாதன் லியான் (4), போல்டாக, இங்கிலாந்து வீரர்கள் வெற்றி உற்சாகத்தில் மிதந்தனர். மிக மோசமாக ஆடிய ‘நடப்பு சாம்பியனாக’ வந்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்து பெரும் அவமானத்தை சந்தித்தது. வோஜஸ் (51) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 6, மார்க் வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருதை முதல் இன்னிங்சில் 8 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வென்றார். வெறும் 2 நாட்கள் 40 நிமிடங்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியை அந்நாட்டு ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என புகழ்கின்றனர். இந்த வெற்றியின் மூலம் 3–1 என்ற முன்னிலையுடன், ஆஷஸ் கோப்பையை வசப்படுத்தியது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 20ல் துவங்குகிறத

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here