சம்பியனாகியது றெயின்போ விளையாட்டுக் கழகம்…

0
529 views

வல்வை விளையாட்டுக் கழகத்தின் அனுமதியுடன், வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்ட லீக் முறையிலான அணிக்கு 06 வீரர்கள், 05 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட VDPL (Valvai Domestic Premier League) சுற்றுப்போட்டியில் றெயின்போ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

நேற்று மாலை 3.30 மணியளவில் றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற PLAY OFF போட்டியில் லீக்க சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த சைனிக்ஸ் வி.க, றெயின்போ வி.க, நேதாஜி வி.க, உதயசூரியன் வி.க ஆகிய அணிகள் மோதின. இதில் றெயின்போ மற்றும் நேதாஜி அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டது.

இந்தப் போட்டியில் றெயின்போ விளையாட்டுக் கழகம், நேதாஜி விளையாட்டுக் கழகத்தை 04 இலக்குகளால் வீழ்த்தி சம்பியனாகியது. மூன்றமிடத்தை சைனிக்ஸ் விளையாட்டுக் கழகமும், நான்காமிடத்தை உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டது.

இந்தச் சுற்றுப்போட்டியின் தொடராட்ட நாயகனாக சைனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரசாந்தும், அதிகூடிய ஓட்டங்கள், அதிகூடிய ஆறு ஓட்டங்களை குவித்த வீரராக றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் பிரகலாதனும், அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய வீரராக சைனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மேனகாந்தும், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் ஜெகனும், சிறந்த அனுபவ வீரராக உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் கிருஸ்னகுமாரும், சிறந்தஇளம் வீரராக உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஜெயக்காந்தும், இத்தொடரின் நன்நடத்தை அணியாக உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here