இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக இன்று கூடியது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. வங்கதேசம் சென்ற அணியிலிருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரண் சர்மாவுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் 2011-க்குப் பிறகு டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரிலும் ஹர்பஜன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கரண் சர்மாவும் முகமது ஷமியும் அணியில் இடம்பெறவில்லை என்று சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 அன்று தொடங்குகிறது.
இந்திய அணி: கோலி (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, சஹா, ஹர்பஜன் சிங், அஸ்வின், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், மிஸ்ரா