இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவருமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று (செவ்வாய்கிழமை) காலமானார். அவருக்கு வயது 87.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. மெல்லிசை மன்னரின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஆவரின் இறுதி சடங்குகள் நாலை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது