கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியான 7 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டமும், 3ம் இடத்திற்கான போட்டியும் 2015.06.13, சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் யங்கம்பன்ஸ் மைதானத்தில் பெருமளவு ரசிகர்கள் மத்தியில் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது.
3ம் இடத்திற்கான போட்டியில் இளவாளை யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியினரும் தமக்கு கிடைத்த பல இலகுவான வாய்ப்புக்களை தவறவிட்ட போதும்இ முற்பாதியில் தேசிய அணி வீரன் ஞானரூபனின் அற்புதமான கோலினால் 1:0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் ஞானரூபன் லாபகமாக வழங்கிய பந்தை கோலாக்கினார். இறுதியில் இளவாளை யங்கென்றிஸ் அணியினர் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இறுதி போட்டியில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. போட்டியின் முற்பாதியின் ஆரம்பத்திலேயே சென்மேரிஸ் அணி வீரர் யூட் தமது அணிக்காக அற்புதமான கோலினை போட்டார். பின்னர் மீண்டும் சில நிமிடங்களில் யூட் மீண்டுமொரு கோலினை போட சென்மேரிஸ் அணி 2:0 என முன்னிலை பெற்றது. இந்த அதிரடித் தாக்குதல்களால் நிலைகுழைந்த டயமன்ஸ் அணியினர் உடனடியாக சுதாகரித்துக்கொண்டு வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்கு பலனாக டயமன்ஸ் அணி வீரர் துசி தமது அணிக்காக 1 வது கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்.
இடைவேளையின் முன்னர் சென்மேரிஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியின் பிற்பாதி ஆரம்பித்த உடனேயே, டயமன்ஸ் அணி வீரர் பீமா தனக்கு கிடைத்த தண்டஉதையை கோலாக மாற்ற போட்டி சமநிலை ஆகியது.பின்னர் போட்டி முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் சென்மேரிஸ் அணி வீரர் யூட் அருமையாக வழங்கிய பந்தை தங்கன் தமது அணிக்காக 3 வது கோலினை போட்டார். இறுதியில் சென்மேரிஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று K.Y.S.C கிண்ணத்தை கைப்பற்றினார்கள். சென்மேரிஸ் சார்பாக யூட் -2 தங்கன்- 1 கோல்களை போட்டனர்.
இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதினை சென்மேரிஸ் அணி வீரர் தங்கன் தெரிவுசெய்யப்பட்டார்.
இச் சுற்றுப்போட்டியின் தொடர்நாயகனாக இளம் நட்சத்திரம் யூட் (சென்மேரிஸ் அணி) தெரிவுசெய்யப்பட்டார். இவர் இச் சுற்றுப் போட்டியில் 11 கோல்கள் போட்டார்.
சிறந்த முன்கள வீரனாக பிறேம்குமார் (வீமா) (டயமன்ஸ் அணி) தெரிவுசெய்யப்பட்டார். இவர் இச் சுற்றுப் போட்டியில் 09 கோல்கள் போட்டார்.
சிறந்த கோல்காப்பாளராக அலக்சன் (சென்மேரிஸ் அணி) தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த பின்கள வீரன்– பிரதிவ் (டயமன்ஸ் அணி) தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த நன்னடத்தை வீரனாக உஷானந்த் (டயமன்ஸ் அணி) தெரிவுசெய்யப்பட்டார்.
மக்கள் மனம் கவர்ந்த வீரனாக தவரூபன் (ஞானமுருகன் அணி) தெரிவுசெய்யப்பட்டார்.
தேசிய அணியில் விளையாடும் யங்கென்றிஸ் அணி வீரரான ஞானரூபனுக்கு சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
வளர்ந்து வரும் வீரனாக தனேஷ் (யங்கென்றீசியன் அணி) தெரிவுசெய்யப்பட்டார்.
சுற்றுப்போட்டியின் சிறந்த நன்னடத்தை அணியாக யாழ் ஐக்கியம் அணி தெரிவுசெய்யப்பட்டது.
இறுதிப் போட்டியின் சில பதிவுகள்: