வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் கூறியதாவது உமேஷ் யாதவ் பந்துவீச்சு என்னை கவர்ந்திருக்கிறது. அவர் இந்தியாவின் உண்மையான வேகப்பந்து வீச்சாளர். அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. இதுபோன்ற வேகம் இதற்கு முன்பு இருந்த இந்திய வீரர்களில் இருந்ததில்லை. முகமது ஷமியும் சிறப்பாக வீசுகிறார். ஆனால் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
கபில்தேவ் ஸ்விங் பவுலர். அதுபோன்று ஸ்ரீநாத் நன்கு வேகமாக வீசுவார். ஆனால் அவரை விட உமேஷ்யாதவ் நன்கு வேகத்தில் வீசுகிறார். தற்போது பேட்ஸ் மேன்கள் அதிக எடை கொண்ட பேட்டுகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் ஷாட்–பிட்ச் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.