பருத்தித்துறை செயலகத்தினால், பிரதேச செயலகத்திற்குற்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருபாலருக்குமான கரப்பந்தாட்டப் போட்டிகள் பருத்தித்துறை விக்கிரமன் வி.க மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் காலுதியில் தொ்ண்டமனாறு ஒற்றுமை வி.க வையும், அரையிறுதியில் கெருடாவில் அண்ணா வி.க எதிர் கொண்டு வெற்றி பெற்ற வல்வை வி.க, இறுதிப்போட்டியில் விவேகானந்தா வி.க இடம் தோல்வியடைந்தது.
பெண்களுக்கான போட்டியில் அரையிறுதியில் தெ்ண்டமனாறு ஒற்றுமை வி.க ஐ வீழ்த்திய வல்வை வி.க, இறுதிப்போட்டியில் பருத்தித்துறை செந்தோமஸ் வி.க இடம் தோல்வியடைந்தது.