கரவெட்டி சோழங்கன் வி.க நடாத்திய மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று (24-05-2015) காலை 10.30 மணியளவில் சோழங்கன் வி.க மைதானத்தில் நடைபெற்றது. அணிக்கு 10 பந்துப்பரிமாற்றங்கள், 11 வீரர்களைக் கொண்ட சுற்றுப் போட்டியில், கரவெட்டி மகேசன் வி.க தை எதிர் கொண்டது வல்வை வி.க.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வல்வை வி.க அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை வி.க நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 85 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக பிரகதீஸ் 15, மதன் 11, பிரசாந் 10, ஜெகன் 10, மணிமாறன் 09 ஓட்டங்களையும் குவித்தனர்.
பதிலுக்கு 86 ஓட்டங்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மகேசன் வி.க நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 09 இலக்குகளை இழந்து 83 ஓட்டங்களை எடுத்து 02 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
வல்வை அணி சார்பாக பந்துவீச்சில் மதன் 03, ஜெகன் 02, பிரகலாதன், மயூரன், ஜிவிந்தன் தலா 01 இலக்குகளையும் வீழ்த்தினர்.