புங்குடுதீவில் காமுவர்களின் காமப் பசிக்குப் இரையான சகோதரி வித்தியாவின் இறப்பிற்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை (20-05-2015) வல்வெட்டித்துறை பிரதேசம் எங்கும் பூரண கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறைப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சங்கங்களின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றும் நடாத்தப்பட்டது. காலை 09.00 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் ஆரம்பமான பேரணி பொலிகண்டி, திக்கம், பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி, இமையாணன், உடுப்பிட்டி, தொண்டமனாறு ஊடாக மு.ப 11.30 மணியளவில் மீண்டும் வல்வெட்டித்துறைச் சந்தியை வந்தடைந்தது.
பின்பு வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பேரணி நிறைவடைந்தது.