யுவராஜ் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம்; அதிற்சியில் டெல்லி நிர்வாகம்..!

0
522 views

 

ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும்.

இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில; சமபலத்துடன் திகழ்கிறது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தன் மூலம் இறுதிப்போட்டியில் நுழைய 2 முறை வாய்ப்பு இருக்கிறது.

ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் 4 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்றது. அதில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக 5 போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. 2–வது இடத்தை பிடித்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைய சென்னையை போல 2 முறை வாய்ப்பு பெற்றுள்ளது. ‘பிளேஆப்’ முறை 2011–ல் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையை போலவே மும்பை அணியும் 5–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2011–ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி சமபலத்துடன் திகழ்கிறது.

சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 2011–ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான்‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது 3–வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவதால் தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும். சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாகும்.

கடந்த முறை மயிரிழையில் ‘பிளேஆப்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த முறை கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் 4–வது இடத்தை பிடித்து வாய்ப்பை பெற்றது. அறிமுக ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த தொடரில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டது கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது. 2–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றில் ஆடுகிறது.

ஐபிஎல் சீசன் 8 போட்டிகளில் வீரர்கள் விளையாடி உள்ள போட்டிகளை பார்க்கையில் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 562 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் அஜின்கெய ரஹானே 498 ரன்கள் எடுத்து 2 வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் வீராட் கோலி 481 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும், அதே அணியின் டி வில்லியர்ஸ் 446 ரன்கள் எடுத்து 4-வது இடத்திலும் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 439 ரன்கள் எடுத்து 5 வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்சின் டிவைன் பிரவோ 20 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து மும்பை இந்தியன் லலித் மலிங்கா (19 விக்கெட்) ,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் யுஸ்வேந்திர சாகல் (19 விக்கெட்) , அதே அணியை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் (18 விக்கெட்),ஆசிஸ் நெக்ரா( 18 விக்கெட்) உள்ளனர்.

அதிக ரனகள் எடுத்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னரும்( 562) அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லும் ( 34) ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் டிவில்லியர்ஸ்( 133*) அதிக ரன்ரே ட் உள்ளவர் ஆண்ட்ரே ரஸ்சல் 191.89, ஆகியோர் உள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் மிகவும் மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தி உள்ளனர். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ரூ1.6 கோடிக்கு யுவராஜ் சிங் ஏலம் எடுக்கபட்டு உள்ளார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இவர் தான். யுவராஜ்சிங் மொத்தம், 13 போட்டிகளில் பேட் செய்துள்ளார். மொத்தம் சேர்த்த ரன்கள் 248. இதில் இரு அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன் என்பது 57. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 118. மொத்தம் சேர்த்த பவுண்டரிகள் 23, சிக்சர்கள் 10. ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.

சென்னைக்கு-9, ராஜஸ்தான்-27, பஞ்சாப்-54, ஹைதராபாத்-9, கொல்கத்தா-21, மும்பை-2, பெங்களூர்-2, ராஜஸ்தான்-22, மும்பை-57, கொல்கத்தா-0, ஹைதராபாத்-2, சென்னை-32, பெங்களூர்-11. பந்து வீச்சிலும் சொதப்பல் யுவராஜ்சிங் பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. 9 ஓவர்கள் வீசிய யுவராஜ்சிங், 72 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங், டி20 உலக கோப்பை இறுதிபோட்டியின் சொதப்பல் ஆட்டத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவேயில்லை.

யுவராஜ்சிங்கிற்கு டெல்லி கொடுத்த தொகையையையும், நடப்பு சீசனில் யுவராஜ் எடுத்த 248 ரன்களை வகுத்து பார்த்தால், யுவராஜ்சிங்கின் எடுத்துள்ள ஒவ்வொரு ரன்னுக்கும் டெல்லி கொடுத்த விலை ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து, 161.

அதுபோல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டவர் தினேஷ் கார்த்திக். இவர் ரூ.10. 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் 14 போட்டிகளில் 105 ரன்கள் எடுத்து உள்ளார். கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் 14 செய்து உள்ளார்.

அடுத்தபடியாக டெல்லி டேர் டெவில் அணிக்காக இலங்கை வீரர் ஆங்கிலோ மேத்யூ ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 144 ரன்கள் எடுத்து உள்ளார். பந்து வீச்சு மூலம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அதே அணியில் ரூ. 4 கோடிக்கு ஜாகீர்கான் எடுக்கபட்டு உள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டு எடுத்து உள்ளார். அதே அணியில் அமித் மிஸ்ரா ரூ.3.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார். அவர் 12 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த டிரண்ட் போல்ட் ரூ. 3.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here