புங்குடுதீவு மாணவியின் கோரக் கொலை; போராட்டங்களால் பற்றி எரியும் வடபகுதி
புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்கக்கோரியும் யாழின் பல பாகங்களில் போராட்டஙங்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதனால் நீதிமன்ற முன்றல், காரைநகர், அல்லைப்பிட்டி, கிளிநொச்சி, யாழ் பல்கலைக்கழகம் என இன்னும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த கொடிய செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கு நீதி கிடைக்க வேண்டியும் இன்று பகல் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீற்பு போராட்டத்தின் படத்தொகுப்பு: