முழுமதியாய்
காலைப் பொழுதுதான் மலர கவிதையாய் நாம் கண்டோம்.
வல்வை செய்திகள் இணையத்தளத்தை கண்டோம்.எம் முகம் மலர்ந்தது முகப்போ முழுமதியாய்.எப்போது பிறந்தது ?கேள்விகள் தாம் தொடுக்க ,தீபாவளித்திருநாளில் என்றனர்.
முகப்போ முழுமதி என்றால் அதற்கு தோரணம் வைத்தது போல் வண்ண விளம்பரங்கள் மாலையானது.வல்வையில் பல இணையத்தளங்கள் .மகிழ்ச்சி ஆனால் பெருமகிழ்ச்சி மீண்டும் வல்வை செய்திகள் இணையத்தளம் (www.valvainews.org). சிவனும் அம்பாளும் ஆசி வழங்க கூடவே எம் பெருமான் கப்பலுடையவரும் மற்றும் ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களும் ஆசிவழங்க வல்வைக்கே உரித்தான கம்பீரம் இணையத் தளத்தின் முகப்பினூடே நாம் கண்டோம்.
வாழ்த்துக்கள் கூறுவது மட்டுமல்லாது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.வாழிய உங்கள் பணி தொடரட்டும்.பக்கசார்பற்ற விடயங்கள்,உண்மை விடயங்கள்,நல்ல விடயங்கள் ,பயன் தரும் மருத்துவக்குறிப்புகள் அதுமட்டுமல்ல உடனுக்குடன் செய்திகளை வழங்குவதன் மூலம் வல்வை செய்திகள் இணையத்தளம் முன் மாதிரியாய் இருக்க வேண்டும்.மற்றும் பொது நலத்துடன் இந்த வேலையை செய்வதன் மூலம் சிறந்த அபிமானத்தைப் பெற முடியும்.இன்றுவரை பார்த்ததில் மிக மிக சிறப்பாக உள்ளது.மென் மேலும் உங்கள் பணி தொடரவும் இந்த வல்வை செய்திகள் இணையத்தளத்தை ஆரம்பித்த அனைவருக்கும் இதை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .வாழ்க வளமுடன்.
வாழ்த்து கூறும் நாம் ,
வல்வை சுந்தரி கலா மன்றத்தின்
சுந்தரி கார்த்திகேசன் .
வல்வை சுந்தரி கலா மன்றத்தை பற்றி
“இருவிழிகள்”“வாடாத மலர்கள்”.
நடிகர்கள் – கார்த்திகேசன் ,ஆனந்தசிகாமணி (வெள்ளைக்குட்டி),தமிழ்ச்செல்வன் (தமிழன்),நவஜீவன்(கட்டி) ,செல்வபுலேந்திரன் (வெள்ளை).
இருவிழிகள் நாடகத்திலிருந்து …
நடிகர்கள் – கார்த்திகேசன் ,ஆனந்தசிகாமணி (வெள்ளைக்குட்டி),தமிழ்ச்செல்வன் (தமிழன்),நவஜீவன்(கட்டி) ,செல்வகுலேந்திரன் (வெள்ளை),சிவா ,அநபாயன்,இளங்கோ,சைலஜா,சிவஅன்பு (துரை),செந்தில் ,இராசசேகரம்(குட்டித்தம்பி),கண்ணன்.