கொல்கத்தா அபார வெற்றி…!

0
341 views

8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை கொல்கத்தா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்தது.

முதல் ஆட்டம்
8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும்  மும்பை இந்தியன்சும் கோதாவில் இறங்கின. வெளிநாட்டு வீரர்களுக்குரிய 4 பேர் இடத்திற்கு மும்பை அணியில் ஆரோன் பிஞ்ச் பொல்லார்ட் கோரி ஆண்டர்சன்  மலிங்கா ஆகியோரும்  கொல்கத்தா அணியில் சுனில் நரின் ஷகிப் அல்–ஹசன் ஆந்த்ரே ரஸ்செல் மோர்னே மோர்கல் ஆகியோரும் இடம் பிடித்தனர்.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும் ஆரோன் பிஞ்சும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2–வது ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பிஞ்ச் (5 ரன்) மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி  8–வது ஐ.பி.எல்.–ல் முதல் விக்கெட்டாக வெளியேறினார். ஆடுகளத்தில் பந்து பவுன்சும் ஆனது. திடீரென தாழ்வாகவும் வந்தது. இரு வித தன்மையுடன் காணப்பட்ட ஆடுகளத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். தொடர்ந்து ஆதித்ய தாரே (7 ரன்)  அம்பத்தி ராயுடு (0) அடுத்தடுத்து நடையை கட்டியதால் மும்பை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது.

ரோகித் சர்மா அபாரம்
இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன்இ கோரி ஆண்டர்சன் இணைந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து மீட்டனர். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி 14 ஓவரில் 80 ரன்களைத் தான் எட்டியிருந்தது.
நிலைத்து நின்ற பின்னர் ரோகித் சர்மாவும்இ ஆண்டர்சனும் கொல்கத்தாவின் பந்துவீச்சை நொறுக்கினர். குறிப்பாக ரோகித் சர்மாஇ உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிஇ ஒரு சிக்சரை விரட்டி அசத்தினார். ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் ஒருகை பார்த்தனர்.
பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து விடுபட்டு தனது பவுலிங் ஸ்டைலை சற்று மாற்றியுள்ள சுனில் நரினின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோகித் சர்மா–கோரி ஆண்டர்சன் ஜோடியை கடைசி வரை கொல்கத்தா பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. அதற்கு அவர்கள் தங்களது பீல்டிங் மீது தான் குறைபட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டர்சன் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஆந்த்ரே ரஸ்செல் கோட்டை விட்டார். ரோகித் சர்மா 70 ரன்களில் இருந்த போது வழங்கிய சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் உத்தப்பா வீணடித்தார்.

மும்பை 168 ரன்
சதத்தை நெருங்கிய ரோகித் சர்மாவுக்கு கடைசி 2 பந்துகளில் 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரின் 5–வது பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் கடைசி பந்தில் கோரி ஆண்டர்சன் சிக்சர் அடித்து தனது அரைசதத்தை கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும் (65 பந்து 12 பவுண்டர  4 சிக்சர்)  கோரி ஆண்டர்சன் 55 ரன்களுடனும் (41 பந்து 4 பவுண்டரி  3 சிக்சர்) களத்தில் நின்றனர். இவர்கள் கூட்டாக 88 பந்துகளில் 131 ரன்கள் சேகரித்ததே 4–வது விக்கெட்டுக்கு மும்பை அணியின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா வெற்றி
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா (9 ரன்) ஏமாற்றினாலும்  மனிஷ் பாண்டேவும் (40 ரன் 24 பந்து 2 பவுண்டரி 3 சிக்சர்) கேப்டன் கவுதம் கம்பீரும் (57 ரன் 43 பந்து 7 பவுண்டரி ஒரு சிக்சர்) அணியை தூக்கி நிறுத்தினர். கம்பீருக்கு இது 24–வது ஐ.பி.எல். அரைசதமாகும்.

இதன் பின்னர் சூர்யகுமார் யாதவும் யூசுப் பதானும் கைகோர்த்து அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தனர். சூர்யகுமார் யாதவ் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். பம்ரா வீசிய 17–வது ஓவரில் இந்த ஜோடி மூன்று சிக்சர் விளாச ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.

கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் (20 பந்துஇ ஒரு பவுண்டரி  5 சிக்சர்) யூசுப் பதான் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here