08 வது ஐ.பி.ல் கிறிக்கட் தொடர் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

0
438 views

 2008 ஆம் ஆண்டு ஆரம்பமான ஐ.பி.ல் தொடர், பல்வேறு சாதனைகள், பிரச்சனைகள், தடைகள் விமர்சனங்கள், இரசிகர்களின் பேராதரவு என்பவற்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது 8 வது ஆண்டு நடைபெறுகிறது. இந்தியன் பிரிமியர் லீக் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இத் தொடருக்கு உலகளாவிய கிறிக்கட் இரசிகர்கள் மத்தியில் இருக்கின்ற வரவேற்பு வேறு எந்தத் தொடர்களுக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

ஆனால் எந்த நோக்கத்துக்காக இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மறந்து, அல்லது அந்த நோக்கத்திலிருந்து விடுபட்டு அதிக பணம் பிடித்தமான வீரர்கள் என்ற இரு நோக்கங்களுடன் 07 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த 08 ஆவது ஆண்டும் அதே நோக்கங்கள் தான் முன் நிற்கின்றன என்பதை யாரலும் மறுக்க முடியாது. இந்நிலையில் ஒரு ஆங்கில முகப்புத்தகத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு விதம் விதமான தமிழ்ப் படப் பெயர்களை சூட்டி அழகு பார்த்துள்ளனர். அவற்றை நாம் உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளோம்.

ஆயிரத்தில் ஒருவன்: டோனி 07
கப்டன் கூல் ஐ.பி.ல் வரலாற்றிலே அனைத்துத் தொடருக்கம் கப்டனாக இருந்த ஒரே கப்டன் மற்றும், சென்னை அணிக்கு தலா இரண்டு தடவைகள் IPL & CLT20  கிண்ணங்களை வென்ற ஒரே கப்டன். போட்டிகளை பினிஸ் செய்வதில் அவருக்கு நிகர் அவர் தான். ஐ.பி.ல் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கப்டன் இப்படி பல சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளார்.

பொல்லாதவன்: மெக்கலம் 42
நியூசிலாந்து அணியின் வெற்றிக் கப்டன். தற்போதிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களேயே மிகவும் ஆபத்தான வீரர் என்று பெயரெடுத்தவர். சென்னையில் சுமித்துடன் ஆரம்ப ஜோடியாக களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை ஆரம்பத்திலேயே சிதரடிப்பதில் வல்லவர். இந்த வருட தொடரில் மிகவும் அபாயகரமான வீரராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

தளபதி: ரெய்னா 03
கப்டன் டோனியின் நம்பிக்கைக்குறிய தளபதி. டோனி என்ற பெயரைக் கேட்டாலே சுழன்றடிக்க ஆரம்பித்து விடுவார். சென்னையின் பலமே இவர் மூன்றம் இலக்கத்தில் களமிறங்குவது தான். இவரின் பங்களிப்பின்றி சென்னையின் வெற்றிகள் எவையும் இல்லை. தேவைப்படும் நேரத்தில் சுழலிலும் அசத்தக் கூடியவர். உலகின் மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவரும் கூட. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 87 ஓட்டங்களை வெறும் 25 பந்துகளில் ((6×6, 4×12  ) அடித்து நொருக்கினார். அந்த ஆட்டத்தை பார்த்த எந்த கிறிக்கட் ரசிகனும் இவரின் ஆட்டத்தை வாழ்நாளில் மறக்க மாட்டான்.

எங்க வீட்டுப் பிள்ளை: அஸ்வின் 99
சென்னை அணியின் செல்லப்பிள்ளை. மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளர். டோனியின் மனங்கவர்ந்த வீரர். nநருக்கடியான நேரங்களில் டோனியின் கையில் இருக்கும் ஆயுதம். சென்னை அணி இருக்கும் வரை அஸ்வினும் அந்த அணியில் இருப்பார். தனது நுற்பமான பந்துவீச்சால் எந்த ஒரு துடுப்பாட்ட வீரரையும் சிதரடிக்கக் கூடியவர். சென்னை இரசிகர்களின் செல்லப் பிள்ளை.

சகலகலா வல்லவன் ஜடேஜா 08
சென்னை அணிக்கு கிடைத்த நல்லதொரு இடதுகை சகலதுறை வீரர். இறுதி நேரதில் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க வல்லவர். முக்கியமான தேரத்தில் தனது பந்தவீச்சின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர். சிறந்த களத்தடுப்பாளரும் டகூட.

நல்லவனுக்கு நல்லவன்: டுபிளெசிஸ் 13
தென்னாபிரிக்க அணியின் மிகச் சிறந்த அதிரடி வீரர். எந்த ஒரு நிலையிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியவர். டோனியின் தலைமைத்துவதின் கீழ் விளையாடுவதைப் பெருமையாகக் கூறுபவர். மிகச் சிறந்த களத்தடுப்பாளரும் கூட.

பில்லா டுவைன்: பிராவோ 47
மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடிச் சகலதுறை வீரரான இவரை முதல் மூன்று தொடரிலும் மும்பை அணிக்காக ஆடிய இவரை நான்காம் ஆம் தொடரில் மும்பை அணி கழட்டி விடப்பட்ட அவரை சென்னை அணி எடுத்தது மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரான இவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்துவீசக்கூடிய திறமை படைத்த அபாயகரமான வீரராவார் களத்தடுப்பில் சிறபபாகச் செயற்படும் இவர் பிடியெடுப்பொன்றை நிகழ்த்தியவுடன் நடனமாட ஆரம்பித்துவிடுவார் அதற்கெகன்றே இவருக்கு பெருந்திரலான ரசிகர் கூட்டம் உண்டு மேற்கிந்திய தீவுகளின் முன்னால் அணித்தலைவரான இவர் கிறிக்கட் சபையுடனான முரண்பாடு காரணமாக உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற வில்லை உலகக்கிண்ணத்தில் இவர் இல்லததன் தாக்கத்தை மேற்கிந்திய தீவுகள் நன்றாகவே உணர்ந்துள்ளது

சின்னத் தம்பி: மொகித் 18
டோனி கண்டெடுத்த சர்மா எனும் முத்து சென்னை அணியின் சொத்து. 06 வது தொடரில் அறிமுகமான இவர்இ தற்போது சென்னையின் பிரபல வீரர். தனது மெதுவான பவுன்சர் மற்றும்இ மெதுவான பந்தின் ( சேஞ் ஓ பிலேஸ் ) மூலம் எதிரணித் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைப்பவர். உலகக் கிண்ணத் தொடரிலும் அசத்தியிருந்தார். இவரும் ஒரு சிறந்த களத்தடுப்பாளர் ஆவார்

பொல்லாதவன்: டுவைன் சிமித் 50
மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர் அந்த அணியில் சொல்லும்படியாக ஆடாத போதும் ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போதே அதிரடி வீரர் என்று பெயரெடுத்தார். மூன்று வருடங்கள் மும்பை அணியில் விளையாடிய இவரை 03 ஆண்டில் கழட்டி விட்டதை அடுத்து சென்னை அணி வாங்கியது. கடந்தாண்டு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சென்னை அணியில் கலக்கிய இவர் இந்தாண்டும் கலக்குவார் என்று எதிர் பாக்கலாம். தேவைப்படும் நேரத்தில் தனது மிதவேகப் பந்துவீச்சாளும் எதிரணியை மிரட்டுபவர்.

வேலைக்காரன்: மைக்கல் ஹசி 48
மிஸ்டர் கிறிக்கட் என செல்லமாக அழைக்கப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னால் மத்தியவரிசை வீரரான ஹசி முதல் ஆறு தொடர்களிளும் சென்னை அணிக்காக ஆடினார். ஏழாவது வது தொடரில் சென்னை அணியால் கழற்றிவிடப்பட்ட இவரை மும்பை அணி எடுத்தது. அத்தொடரில் அவர் எதும் சொல்லும் படியாக பிரகாசிக்கவில்லை அதனால் மும்பை அணியால் கழற்றிவிடப்பட்ட அவரை மீண்டும் சென்னை எடுத்தது. எந்த ஒரு நிலையிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். களத்தடுப்பிற்கு வயது ஒரு தடை அல்ல என நிருபிக்கும் களத்தடுப்பாளர் தான் விளையாடிய கப்டன்களிளே டோனி தான் மிகச் சிறந்த கப்டன் என பெருமையாக குறும் ஒருவர்

உத்தம வில்லன்: பிளெமிங்
நியூஸ்லாந்து அணியின் முன்னால் கப்டனான பிளெமிங் 2008 2009 2010 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்த பிளெமிங் பின்னர் 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here