பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தது வல்வை விளையாட்டுக் கழகம். கடந்த வெள்ளிக் கிழமை (03-04-2015) காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் காலுறுதியில் வின்மீன் விளையாட்டுக் கழகத்தை 04 இலக்குகளால் வீழ்த்திய வல்வை விளையாட்டுக் கழகம்> அரையிறுதியில் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்திடம் 29 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறுதியது..!