சம்பியன் ஆகியது றெயின்போ விளையாட்டுக் கழகம்

0
419 views


நடைபெற்ற அமரர். கா. புண்ணியமூர்த்தி ஞாபகார்த்தமாக வல்வை சைனிஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் நேதாஜி அணியை 62 ஓட்டங்களினால் வீழ்த்தி சம்பியனாகியது றெயின்போ விளையாட்டுக் கழகம்

அரையிறுதியில் றெயின்போ விளையாட்டுக் கழகம், உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தையும் நேதாஜி விளையாட்டுக் கழகம், சைனிஸ் விளையாட்டுக் கிகத்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற றெயின்போ விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் ஆடிய றெயின்போ விளையாட்டுக் கழகம் ஆரம்பம் முதலே எல்லைக்கோட்டிற்கு வெளியே பந்துகளை அனுப்ப தவறவில்லை. பிரணவன் மற்றும் கரிகரனின் ஆரம்ப அரைச்சத இணைப்புடனும், பிரகலாதன் மற்றும் மணிமாறனின் இறுதிக்கட்ட அதிரடியின் உதவியோடும், நிர்ணயிக்கப்பட்ட 12 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 06 இலக்குகளை இழந்து 145 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக பிரணவன் நான்கு ஆறுகள் உட்பட 27 ஓட்டங்களையும் மணிமாறன் தலா இரண்டு ஆறுகள் நான்குகளுடன் 24 ஓட்டங்களையும் குவித்தனர். புந்துவீச்சில் நேதாஜி அணி சார்பாக ஜிவிந்தன் 02, நேரன் 01, முய+ரன் 01, தர்சன் 01, இலக்குகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 12 பந்துப் பரிமாற்றங்களில் 146 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நேதாஜி அணியினர் ஆரம்பம் முதலே றெயின்போ அணியின் பந்து வீச்சாளர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். ஆரம்ப வீரராக களமிறங்கிய தர்சன் ஒறுபுறமாக அதிரடியாக துடுபெடுத்தாடினாலும், அவருக்கு சரியான ஒத்துழைப்பை யாரும் வழங்கவில்லை. இறுதியில் நேதாஜி அணியினர் நிர்ணயிக்கப்பட்ட பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில்07 இலக்குகளை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 62 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ஆட்டநாயகனாக nறயின்Nபா அணியின் பிரணவனும், nதாடர் ஆட்டநாயகனாக Nநதாஜி அணயின் வீரர் ஜிவிந்தனும் தெரிவு செய்யப்பட்டார்கள்

கடந்த சில வருடங்கலாக வல்வைக்குற்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட nமன்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வீழ்த்தப்பட முடியாத அணியாக வல்வை றெயின்போ விiளயாட்டுக் கழகம் திகழ்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here