காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது வல்வை

0
492 views

 

பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமான அணிக்கு 06 நபர்கள்  05 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (28-03-15) காலை 9.00 மணியளவில்  பருத்தித்துறை புளோலி வீனஸ்  மற்றும் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானங்களில் நடைபெற்றது.

முதல் போட்டியில் சக்கோட்டை சென்சேவியர் வி க வை எதிர் கொண்ட வல்வை வி க 03 விக்கட்க்களாலும் இரண்டாவது போட்டிபில் கெருடாவில் விவேகானந்தா வி க வை 47 ஓட்டங்களாலும் வீழ்த்தி வல்வை அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது காலிறுதிப் போட்டிகள் வரும் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here