கி.செல்லத்துரையின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய் திரைப்படம் நோர்வேயில் இடம் பெற உள்ள 2014ம் ஆண்டுக்கான திரைப்படங்களுக்கான பரிசளிப்பு விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது. பெண்களை முதன்மைப் படுத்தி எழுதப்பட்ட இந்தத் திரைப்படத்தின் நாயகிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. வல்வை கலைஞர் ஒருவருடைய திரைப்படம் சர்வதேச தமிழ் திரைப்பட விருதை வென்றிருப்பதால் உலகம் முழுவதும் இருந்து வல்வை மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
2014ம் ஆண்டில் வெளிநாடுகளில் உருவான சிறந்த திரைப்படத்திற்கு வழங்கப்படும் மிற்நைற் சன் விருதை உயிர்வரை இனித்தாய் வென்றுள்ளமை அதனுடைய ஓராண்டு பயணத்தில் முக்கிய காலடியாகும். எதிர்வரும் 22ம் திகதி ஞாயிறு டென்மார்க் ஈக்காஸ்ற் நகரில் ஓராண்டு நிறைவுவிழா காட்சி காண்பிக்கப்பட இருக்கிறதுஇ சிறந்த திரைப்பட வெற்றிக்காக அன்றைய தினம் இலவசமாகக் காண்பிக்கப்பட இருக்கிறது. இதற்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் ஏப்ரல் 23 ம் திகதியில் இருந்து 26 ம் திகதிவரை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம் பெறும் திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் இமயம் காலஞ்சென்ற கே. பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார்இ நடிகர் சித்தார்த் போன்றவர்களும் பரிசு பெற்றுள்ளார்கள் அத்தருணம் இவர்களுடன் பெருந்தொகை தமிழக திரைப்பிரபலங்கள் பங்கேற்பார்கள். உயிர்வரை இனித்தாய் தமிழக இணைத்தயாரிப்பாளர் பாவல் சங்கர்இ தந்தி ரி.வி எட்வின் ஆகியோரும் உயிர்வரை இனித்தாய் கலைஞர்களுடன் இணைந்து ஒஸ்லோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். உயிர்வரை இனித்தாய் இலங்கையில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஇ இந்தியாவில் திரையிடப்படும் அதே தினம் இலங்கையிலும் வெளியாகும்.