சுவிஸ் நாட்டில் ஜஸ் ஹொக்கி விளையாட்டில் கலக்கும், வல்வை புளுஸ் சிவசுப்பிரமணியம் அண்ணாவின் பேரன் அஸ்வின் சிவசுப்பிரமணியம்

0
455 views

சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் திரு, திருமதி. நாகேந்திரம் மேரி ரோசரி தம்பதிகளின்   புதல்வனும், வல்வை புளுஸ் சிவசுப்பிரமணியம் அண்ணாவின் பேரனுமாகிய 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம்சுவிஸ் Jura தேசிய மாநில Ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகிறார். இவர் 9-17. Feb. Canada Bantiam Granby யில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey U 14 பிரிவு போட்டியில் Team Swiss அணி பந்து காப்பாளராக விளையாடியுள்ளார்.

இதில் Swiss team champions கிண்ணத்தையும் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்று அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார்.

அஸ்வின் team Swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அஸ்வின் Swiss இல் முன்னணி கழகங்களின் ஒன்றான EHC Bienne (LNA) mini top வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.

அமரர் திரு. சிவசுப்பிரமணியம் அண்ணா அவர்கள் வல்வை புளுஸ் விளையாட்டு கழகத்தை பொறுப்பேற்று பல வருடங்கள் மிக சிறந்த முறையில் வழிநடத்தியவர். படத்தயாரிப்பாளரான சிவா அண்ணா தான் தயாரித்த சத்தபனகாய் திரைப்படத்தை யோகநாயகி தியேட்டரில் திரையிட்டு வல்வை புளுசின் வளர்ச்சிக்கு நிதி திரட்டிய வரலாற்ரை யாரும் மறக்க முடியாது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here