வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும்மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்டமாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டபோட்டியொன்றினை நடாத்தி வருகின்றது..அந்த வகையில் லீக்ஆட்டங்களானது 31//05/2022 அன்று ஆரம்பிக்கப்பட்டன.
அந்தவகையில் இன்றைய தினம் (11 /06/2022) இடம்பெற்ற லீக் சுற்று ஆட்டமொன்றில் யாழ்மாவட்டத்தின் பலம் பொருந்தியஅணிகளான கம்பர்மலை யங்கம்பன்ஸ் (வட) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன்(யாழ்) விளையாட்டுக்கழகம் மோதியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாதஇந்த ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன்விளையாட்டுக்கழகமானது 2: 1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று லீக் சுற்றின் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது. மயிலங்காடு ஞானமுருகன் அணிசார்பாக விஷின்சன் மற்றும் பார்த்தீபன் தலா ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தனர். கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிசார்பாக பெறப்பட்ட ஒருகோலினையும் குருதரன் பெற்றுக்கொடுத்தார். போட்டியின்ஆட்டநாயகனாக மயிலங்காடு ஞானமுருகன் அணியின் சர்மிலன் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற மயிலங்காடு ஞானமுருகன் அணிக்குவாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடுபோட்டியில் சிறப்பாக செயற்பட்ட கம்பர்மலை யங்கம்பன்ஸ்அணிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்தெரிவித்துக்கொள்கின்றோம்