உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. ஆஸ்திரேலியா நியூசிலாந்து மண்ணில் உலக கோப்ைப கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஹாமில்டனில் இன்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா அயர்லாந்து அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. அயர்லாந்து அணிக்கு போர்டர்பீல்டு ஸ்டெர்லிங் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஸ்டெர்லிங் 42 ரன்களில் அவுட்டானார். ரெய்னா ‘சுழலில்’ ஜாய்ஸ் (2) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய போர்டர்பீல்டு அரை சதம் அடித்தார். இவர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு நெயில் ஓ பிரையன் அரை சதம் விளாசினார். பால்பிர்னே (24) நிலைக்கவில்லை. வில்சன் (6) ஏமாற்றினார். ஷமி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் (1) நெயில் ஓ பிரையன் (75) வெளியேறினர். பின் வந்தவர்கள் விரைவில் கிளம்ப அயர்லாந்து அணி 49 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூனே (12) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.அ உமேஷ் யாத்வ் மோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா சுரேஷ் ரெய்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து களம் இறங்கிய இந்தியா அணி நிதானமாக தனது ஆட்டத்தை துவக்கியது. இந்திய அணிக்கு ரோகித் தவான் இணைந்து சிறப்பான துவக்கம் தந்தனர்.மூனே பந்துவீச்சில் ரோகித் ஒரு பவுண்டரிஇ ஒரு சிக்சர் விளாசினார். அரை சதம் எட்டிய ரோகித் 64 ரன்களில் அவுட்டானார். கசாக் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த தவான்இ ஒரு நாள் அரங்கில் 8வது சதம் அடித்தார். 36.5 ஓவரில் இந்திய அணி 260 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ரகானே ஜோடி வெற்றியை எளிதாக்கியது. இந்திய அணி 36.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (44) ரகானே (33) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக சதமடித்த தவான் தெரிவானார்
தவான் ரோகித் சாதனை ;
இந்திய துவக் வீரர்களான தவான் ரோகித் 174 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் குவித்த முதல் ஜோடி என்ற பெருமை பெற்றது. இரண்டாவது இடத்தில் சச்சின்இ அஜய் ஜடேஜா (163 ரன்கள் எதிர்- கென்யா 1996) ஜோடி உள்ளது.
இத்தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காஇ யு.ஏ.இ. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4 போட்டிகளிலும் எதிரணியின் எல்லா விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தது. இது அயர்லாந்துக்கு எதிராக இன்றும்தொடர்ந்தது. இதன் மூலம்இ ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 5 போட்டிகளில் எதிரணியை ஆல்-அவுட்டாக்கி இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.