வல்வை வைரவிழா உதைபந்து மீண்டும் எதிர்வரும் 03.04.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆரம்பம்..
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை ஒட்டி அணிக்கு 9 பேர் கொண்ட வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட தொடரொன்றை நடாத்தி வந்தது.. அந்த தொடரானது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தப்ப்ட்டிருந்தது.. தற்போது கொரோனா தொற்று குறைவடைந்த காரணத்தினால் வைரவிழா உதைபந்தாட்ட தொடரின் எஞ்சிய போட்டிகள் ( மூன்றாம் சுற்றிலிருந்து இறுதியாட்டம் வரை ) எதிர்வரும் 03.04.2022 ( ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனை உதைபந்தாட்ட அணிகள் மற்றும் ரசிகர்களிற்கு அறியத்தருகின்றோம்..
03.04.2022 அன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் நெடியகாடு விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து விண்மீன் விளையாட்டுக்கழகமும் அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் சென்நியூஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து அண்ணாசிலையடி விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளது..
அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்போடு அழைக்கின்றார்கள்.