உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து திரில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஜிம்பாப்பே காலிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. இத்துடன் ஜிம்பாப்பேயின் இந்த உலககோப்பை பயணம் முடிவுக்கு வந்தது இன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே– அயர்லாந்து அணிகள் மோதியது. ஏற்கனவே 4 ஆட்டத்தில் 3–ல் தோற்ற ஜிம்பாப்வேக்கு நாக்–அவுட் சுற்று போன்றது என்ற நிலையிலே இன்றைய ஆட்டத்தை தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்து விளையாடிய அயர்லாந்துஇ அபாரமான ஆட்டம் மூலம் 331 ரன்கள் குவித்தது. அயர்லாந்து வீரர் ஜாய்ஸ் தனது அதிரடியான ஆட்டம் மூலம் 112 ரன்கள் அடித்தார். பால்பிர்னியும் 97 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களும் தங்களது பங்கிற்கு அணிக்கு ரன்
சேர்த்தனர். அயர்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 331 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து விளையாடியது.ஜிம்பாப்வே அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் டெய்லர் அதிரடியாக ஆடி 121 ரன்கள் எடுத்தார். வில்லியம்ஸ் 96 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் மிகவும் பரபரப்பை எட்டிய ஆட்டம் ஜிம்பாப்வேயின் காலிறுதி கனவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிட்டது. கடைசி ஒருவிக்கெட் மட்டும் கையில் இருந்த நிலையில் ஜிம்பாப்வே வெற்றிப்பெற போராடியது. ஜிம்பாப்வே 9 விக்கெட்களை இழந்தநிலையில், 49.3 ஓவரில் முபாரிவா அவுட் ஆனார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் போராடி தோல்வியுற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததால் ஜிம்பாப்பேயின் உலக கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயம் 3 ஆட்டத்தில் 2–ல் வெற்றி பெற்றுள்ள அயர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் தனது கால்இறுதி வாய்ப்பை மிகவும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.