உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட், நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெற்ற 31–வது லீக ஆட்டத்தில் நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான் (ஏ பிரிவு) அணிகள் மோதின. மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடி முதல் அணியாக கால் இறுதிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து அணி, இலங்கை,
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் அசைக்க முடியாத அணியாக விளங்கி வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து விளையாடியது. வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், ஆப்கானிஸ்தான் 186 ரன்களில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் 47.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகப்பட்சமாக சென்வாரி 54 ரன்களும், ஜாத்ரான் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்.நியூசிலாந்து பேட்டிங் செய்து விளையாடியது. நியூசிலாந்து 36.1 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் இலக்கை தகர்த்தது. நியூசிலாந்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. நியூசிலாந்து அணியில் கப்தில் 57 ரன்களுடனும், மெக்குல்லம் 42 ரன்களுடனும், .வில்லியம்சன் 33 ரன்களுடனும், எல்லியாட் 19 ரன்களுடனும் அவுட் ஆனார்கள். டெய்லர் 24 ரன்களுடனும், அண்டர்சன் 7 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இறுதில்.களத்தில் நின்றனர். நியூசிலாந்து தனது ஐந்தாவது.போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.