தமிழ்நாடு அளவிலான குடோ போட்டியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த சிறுமி செல்வி மோகன்ராஜ் துவாரகா சாதனை . 12வயது 40கிலோ எடைபிரிவில் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.
3வது குடோ தமிழ் நாடு மாநில அளவிலான போட்டி கொங்கு நாடு இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரு ரென்சி கண்ணன் தலைமையில் 30மாணவமாணவிகள் கலந்து கொண்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி மோ.துவராகா 12வயது-40கிலோ எடைபிரிவில் கலந்து கொண்டு முதலாம் இடம் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.