யாழ் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது.மாவட்ட அரச அதிபர்.

0
270 views

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை”

இவ்வாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது. அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது” என்றும் மாவட்டச் செயலாளர் க.மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here