மரண அறிவித்தல் திருமதி சரஸ்வதி செல்வேந்திரா

மரண அறிவித்தல்


திருமதி சரஸ்வதி செல்வேந்திரா

தோற்றம் ; 21.09.1943                                                  மறைவு ; 08.01.2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், கொழும்பு தெகிவளை வண்டவற் பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி செல்வேந்திரா அவர்கள் 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் பட்டயக்கணக்காளர் திரு சபாரத்திரனம் செல்வேந்திரா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் சுப்பிரமணியம் – வள்ளியம்மாள் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சபாரத்தினம், பாக்கியரத்தினம் தம்பதிகளின் மருமகளும், குமரகுரு, காலஞ்சென்ற ஞானேஸ்வரி கிருஷ்ணா, காலஞ்சென்ற கமலம், திருமதி சுந்தரி நிர்த்தனசுந்தரம், Dr இராமலிங்கம் ஆகியோரின் சகோதரியும் , திருமதி வசந்தாதேவி குமரகுரு, , Dr தெய்வேந்திரா, திருமதி இரத்தினாதேவி அழகேந்திரன், Dr மகேந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை 09.01.2017 அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, மாலை 4 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

திரு ச.செல்வேந்திரா
39, 4/4, வண்டவற் பிளேஸ், தெகிவளை
தொலைபேசி – 0779810987

ராம்குமார் – 0777560902

Leave a comment