கமல்ஹாசனை விட்டு பிரியும் கௌதமி

Published on Nov 01 2016 // சினிமா, செய்திகள்

கடந்த 13 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனுடன் வாழ்ந்து வந்த நடிகை கவுதமிஇ அந்த உறவில் இருந்து விலகுவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பக்க பதிவில்இ கடந்த 13 ஆண்டுகளாக மகிழ்ச்சியாகவும்இ மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும்இ தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது என்றும் மகளின் எதிர்காலம் நலனுக்காக பிரிவு அவசியம் எனக் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தம் இருக்காது. கடந்து இரண்டு ஆண்டுகளாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிக கடுமையான முடிவு இது” என்றும் மாற்றம் ஒன்றே மாறாததுஇ மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
ஒரு குழந்தைக்கு தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அந்த கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்துஇ எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும்இ எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.
சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்துஇ அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன்.
அவருடையை திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டுஇ அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.
இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்துஇ அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்இ
பல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும்இ ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்தஇ வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள
விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment