பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் வரணி யுத் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது வல்வை விளையாட்டு கழகம்.

பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச்சங்கத்தின் அனுமதியுடன் வல்வை நெடியகாடு விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்தும் வடக்கின் வெற்றிகிண்ணத்துக்கான போட்டிகள் குறித்த மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது. இவ் ஆட்டதில் வல்வை அணியும் வரணி யுத் அணியும் மோதின பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் இரு அணிக்கும் கிடைத்த சந்தர்ப்ங்கள் தவற விடப்பட கோல்கள் பெறப்படாமல் முடிவுக்கு வந்தது.
தோடர்ந்து இரண்டாம் பாதியாட்டதில் 12 ஆவது நிமிடத்தில் வல்வை அணியின் முன்கள வீரர் பிரசாந் கோல் ஒன்றைப் போட அக்கோலே வெற்றிக்கோலாக அமைய 1:0 என்று வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது வல்வை விளையாட்டுக்கழகம்.

Leave a comment