கபாலியை கசியவிட்டது யார்…படப்பிடிப்புக் குழு நடத்திய ரகசிய விசாரணை!

Published on Jun 12 2016 // சினிமா, செய்திகள்

ட்டகத்தி மெட்ராஸ் வெற்றிப்படங்களின் இயக்குனர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். தன்ஷிகா, கலையரசன், கிஷோர், தினேஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். ரஜினிக்கு வில்லனாக “வின்ஸ்டன் சாவோ” என்ற தைவான் நடிகர்  நடித்திருக்கிறார்.  படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

படத்தில் கபாலி என்ற மலேசியா டான்’ கதாபாத்திரத்தில் ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் ‘நெருப்புடா’ என்ற பாடலில் இடம்பெறும் வசனங்களை ரஜினிகாந்த்தே எழுதி இருக்கிறார். படத்தின் டிரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று படத்தின் ஆடியோ ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்றுமுன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் ‘கபாலி’ பட பாடல்கள் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியானது. படத்தில்  ‘‘நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு. 25 வருசத்துக்கு முன்னாடி எப்டி போனானோ கபாலி. அப்டியே வந்துட்டேன்னு சொல்லு… கபாலிடா..’’ என்ற ரஜினி பேசும் வசனங்களும் இணையதளத்தில் வெளியானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெருப்புடா என்ற பாடலின் 30 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோவும் இணையதளத்தில் வெளியானது  படப்பிடிப்புக் குழுவினருக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தயாரிப்புக்குழு நடத்திய விசாரணையில்  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம்தான் அவ்வாறு இணையத்தில் வெளியிட்டது என தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் ரிங்டோனுக்காக படத்தின் பாடலும் ரஜினியின் வசனங்கள் சிலவற்றுக்குமான உரிமம் முன்னரே வழங்கப்பட்டிருந்தது. பெரும் செலவில் வாங்கப்பட்டிருந்த அந்த உரிமத்தை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீசுக்குப்பின் வெளியிடுவதில் தங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லையென்பதால் அந்த நிறுவனம் சற்று முந்திக்கொண்டதாக வெளிவந்த தகவலையடுத்து சின்ன வருத்தத்துடன் அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தது தயாரிப்புக்குழு.

ஆனாலும் அதிர்ச்சியான படக்குழு, இனி தாமதிப்பது நல்லதல்ல என்ற முடிவோடு ரஜினியுடன் கலந்தாலோசனை செய்து அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்று படத்தின் ஆடியோவை வெளியிடப்பட்டது. நேற்று இரவு முதல் ரசிகர்கள் கபாலி படத்தின்  பாடல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பாடல்களை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

இருப்பினும் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்டுவரும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தின் ஆடியோவை போல மற்ற தயாரிப்பு விஷயங்களும் வெளியானால் படத்தின் வெற்றியை அது பாதிக்கும் என்பதால் தயாரிப்புக் குழு நம்பிக்கையானவர்களோடு படப்பிடிப்பை நடத்திவருகிறது.

நன்றி விகடன்

Leave a comment