புதிய வெட்டுப்புள்ளியின் படி சிவகுரு வித்தியாசாலையில் 8 பேர், வல்வை மகளிர் 6 பேர், அ.மி.த.க பாடசாலையில் 5 பேரும் வல்வை றோ.க.த.க பாடசாலையில் 2 பேரும் சித்தியடைந்துள்ளனர்.

 

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு கடந்தமாத இறுதியில் வெளியிடப்பட்டிருந்நது. வெட்டுப்புள்ளியானது மிக உயர்வானதாக இருந்ததனால் கல்வி அமைச்சிற்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் முறைப்பாடு அனுப்பப்பட்டிருந்தது. ஏற்பட்ட சர்ச்சையினால் இன்று புதிய வெட்டுப்புள்ளி பரீட்சைத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது முன்பு 158 ஆகவிருந்த யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி தற்போது 150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வெட்டுப்புள்ளியின்படி வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 8 மாணவர்களும், வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும,; வல்வை அமரிக்கன்மிசன் பாடசாலையில் 5 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

Leave a comment